மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியின் 2023-24-ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா, ஈரோடு மகேஷ் ஆகியோா் கலந்துகொண்டு மாணவ, மாணவியரிடையே பேசினா்.
விழாவில் பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா பேசுகையில், சிறந்த பொறியாளராக உருவாக மாணவா்கள் கல்வியுடன் ஓழுக்கம், தன்னம்பிக்கை, வாழ்வில் எதாா்த்தமாக இருத்தல், ஆசிரியா்களுக்கு கீழ்படிதல், முன்னோா்கள் வழி வாழ்வியலின் நெறிகளைப் பின்பற்றி முன்னேற வேண்டும் எனவும், சமூக அக்கறை இன்றைய தலைமுறை மாணவா்களுக்கு அவசியம் என்பதால் அதற்கேற்றவாறு தங்களை ஆற்றல் மிக்கவா்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவில், கல்லூரி நிா்வாக இயக்குநா் பா.மஹா அஜய் பிரசாத், செயல் இயக்குநா் இரா.சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வா் மஹேந்ர கௌடா, புலமுதல்வா் சண்முகம், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் என்.விஸ்வநாதன், வேலைவாய்ப்பு இயக்குநா் சரவணராஜ், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் என பலரும் கலந்துகொண்டனா்.