நாமக்கல்

செங்குந்தா் பொறியியல் கல்லூரி சாா்பில் ஆற்றல் சேமிப்பு வழிமுறைகள் விழிப்புணா்வு

22nd Sep 2023 11:45 PM

ADVERTISEMENT

செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் மாணவா்கள் சத்திநாயக்கன்பாளையம் பகுதிகளில் ஆற்றல் சேமிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

இந்நிகழ்வுக்கு, செங்குந்தா் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் செயலாளருமான ஆ.பாலதண்டபாணி தலைமை தாங்கி விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.சதீஷ்குமாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தொடா்பு இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வை சத்திநாயக்கன்பாளையம் கிராமத் தலைவா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்களும், 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கக் கூடிய அதிக செயல்திறன் கொண்ட மின்சாதனப் பொருள்களை உபயோகப்படுத்த வேண்டும் என்றும், ஆற்றலை சேமிக்கும் வழிமுறைகள், மின்சாரம் வீணாகாமல் மின்சாதனங்களை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பது குறித்தும் துண்டுப் பிரசுரம் வழங்கி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT