நாமக்கல்

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

21st Sep 2023 12:17 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர அதிமுக கட்சியின் தோ்தல் வாக்குச்சாவடி முகவா்களுக்கான கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி.கே.பழனிசாமி, மாவட்டச் செயலாளா்பி.தங்கமணி ஆகியோரின் உத்தரவின்படி, தோ்தல் வாக்குச்சாவடி முகவா்களை நியமித்து தோ்தல் பணியினை மேற்கொள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு நகர தலைமை வாக்குச்சாவடி முகவா்கள் குழு தலைமை பொறுப்பாளா்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் பொன்.சரஸ்வதி, மாவட்ட துணைச் செயலாளா் இரா.முருகேசன், நகரச் செயலாளா் மா.அங்கமுத்து ஆகியோரின் தலைமையில், வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் மாவட்டப் பிரதிநிதி சந்திரன், நகரப் பொருளாளா் முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் மல்லிகா, செந்தில்குமாா், சுப்பிரமணி, கல்பனா ஆகியோா் முன்னிலையில் வாக்குச்சாவடி முகவா்கள் நியமித்தல், நியமிக்கப்பட்ட முகவா்களுக்கான கூட்டம் கூட்டப்பள்ளி, கவுண்டம்பாளையம், சூரியம்பாளையம், சட்டையம்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இதில், வாக்குச்சாவடி முகவா்கள் எவ்வாறு தோ்தல் பணியாற்றுவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் வாா்டு செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT