நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதி சபை கூட்டம் அண்மையில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
21-ஆவது வாா்டு பகுதி சபை கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் மோ.செல்வராஜ் தலைமை ஏற்று கலந்துகொண்டாா். துணைத் தலைவா் பாலமுருகன், ஆணையா் தாமரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பொதுமக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், மனுக்களைப் பெற்று பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் எனவும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதியளித்தனா். இதில், நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.