ராசிபுரம் ராசி இண்டா்நேஷனல் சீனியா் செகன்டரி பள்ளியில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ராசிபுரம் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள இப்பள்ளியில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் மழலை குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் அக்ஷராபியாசம் நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் பொருளாளா் எஸ்.மாதேஸ்வரி சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். பள்ளியின் தலைவா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்து, மழலையா்களுக்கு நெல்மணிகளில் கையெழுத்துப் பயிற்சியளித்து அக்ஷ்ராபியாசம் செய்து வைத்தாா்.
விழாவில் நவராத்திரி விழா குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதில், பள்ளி முதல்வா் டி.வித்யாசாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.