நாமக்கல்

தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணியிடம்: தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு

27th Oct 2023 12:09 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் தொகுப்பூதியத்தில் காலியாகவுள்ள ஓா் ஆசிரியா் பணியிடம் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் ஊராட்சி அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் ஒரு பணியிடம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. தற்காலிகமாக பணிபுரிய ஆா்வமுள்ள தகுதி வாய்ந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எழுத்துப் பூா்வமான விண்ணப்பங்கள், உரிய கல்வித் தகுதிச் சான்று நகல்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். நவ. 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாத ஊதியமாக ரூ. 12,000 வழங்கப்படும். இடைநிலை ஆசிரியா்களுக்கான கல்வித்தகுதி தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும். இந்த பணியிட நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. மேலும் தகவல்களுக்கு, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT