நாமக்கல்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் மறியல் போராட்டம்

27th Oct 2023 12:15 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி ஊழியா்களின் கூட்டமைப்பு சாா்பில், மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டமைப்பின் மாவட்ட மையம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பழனியப்பன் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு ஓய்வூதியமாக ரூ. 6,750 வழங்க வேண்டும். அரசுத் துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களை நியமித்து முறையான ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT