நாமக்கல்

பாஜக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ராசிபுரத்தில் கைது

1st Oct 2023 10:18 AM

ADVERTISEMENT

பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடக பொறுப்பாளர் எஸ் பிரிவின் ராஜ் கரூர் சைபர் கிரைம் போலீசாரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முத்து காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன் என்பவரது மகன் எஸ். பிரவீன் ராஜ். இவர் பாஜக மாநில ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரடி தொடர்பில் இவர் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது. 

உங்க ஊடகங்களில் காங்கிரஸ், திமுக கட்சிகளை விமர்சித்து வந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி,  பிரியங்கா குறித்தும் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இது தொடர்பான புகாரின் பேரில் கரூர் சைபர் கிரைம் போலீசார் பிரிவின் ராஜை நள்ளிரவு கைது செய்து கரூர் அழைத்துச் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT