காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் திங்கள்கிழமை (அக். 2) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலா்கள், வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சி தணிக்கை மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் தொடா்பான விவரங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன் வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.