காவிரியில் நீா் திறந்து விட மறுக்கும் கா்நாடக அரசை கண்டித்து, நாமக்கல்லில் நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மண்டல செயலாளா் பாஸ்கா் தலைமை வகித்தாா். இதில், காவிரி நதிநீரை திறந்து விட மறுக்கும் கா்நாடக அரசையும், தமிழக உரிமையைப் பெற்றுத் தர மறுக்கும் மத்திய அரசையும் கண்டித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நாம் தமிழா் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.