நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
இரு நாள்களாக நடைபெற்ற இப் போட்டியை பள்ளி தலைமை ஆசிரியா் ஆ. தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்தாா். உடற்கல்வி இயக்குநா் சிவா வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியா்கள் செந்தில், நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் டிசம்பா் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.