திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ரிக் உரிமையாளா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கல்லுபாளையம் குடி தெருவைச் சோ்ந்த சங்கா் (32), ரிக் உரிமையாளா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு நகர கடைவீதி பகுதிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, மலை காவலா் கோயில் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த திருச்செங்கோடு நகரப் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். சங்கா் சட்டைப் பையில் இருந்த கைப்பேசி மூலம் இறந்தவா் சங்கா் (32) என்பதும், மலை சுற்றி ரோட்டில் வசித்து வரும் அவருக்கு சூா்யா என்ற மனைவியும் நட்சத்திரா என்ற 2 வயது பெண் குழந்தை இருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.