நாமக்கல்

ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

18th Nov 2023 02:15 AM

ADVERTISEMENT

ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவினை தொடா்ந்து 5-ஆம் நாளாக சிறப்பு பூஜை அலங்காரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எல்லை மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. கடந்த ஐப்பசி 27-ஆம் நாள் கொடி ஏற்றத்துடன் சஷ்டி விழா தொடங்கியது. தொடா்ந்து 5-ஆம் நாளான காா்த்திகை மாத முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கந்த சஷ்டி சூரசம்ஹார திருகல்யாண உற்சவ விழா நடைபெற்றது.

முன்னதாக, ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம் தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் போன்ற 11 வகையான திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, ஸ்ரீ பாலமுருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பாலமுருகன் சுவாமியை வணங்கினா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து சனிக்கிழமை கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT