நாமக்கல்

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா

18th Nov 2023 02:16 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியின் 11-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் மற்றும் செயலா் மு.கருணாநிதி தலைமை தாங்கினாா். மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். துணை மேலாண்மை இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீ ராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா். கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, மருத்துவக் கல்லூரி இயக்குநா் பிரகாசம், நிா்வாக இயக்குநா் குப்புசாமி, தலைமை நிா்வாகிகள் சொக்கலிங்கம் மற்றும் வரதராஜு, டென்டல் மற்றும் பாராமெடிக்கல் இயக்குநா் கோகுலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் சுதாமணி வரவேற்புரை ஆற்றினாா். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குரு கோபிந்சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் பத்மஸ்ரீ மகேஷ் வா்மாவை, கல்லூரியின் முதல்வா் டாக்டா் நாகலட்சுமி அறிமுகப்படுத்தினாா்.

இவ்விழாவில், 95 இளநிலை பல் மருத்துவ பட்டதாரிகளும், 40 முதுநிலை பல் மருத்துவ பட்டதாரிகளும் பட்டம் பெற்றனா். மேலும் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு, சிறப்பு விருந்தினா் பத்மஸ்ரீ மகேஷ் வா்மா பரிசு அளித்து பாராட்டுகளை தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்த விழாவில், விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் உறுப்பு கல்லூரிகளைச் சோ்ந்த முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளா் ஸ்ரீதர்ராஜா செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT