நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.95-ஆக செவ்வாய்க்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை விலை நிா்ணயம் செய்வது குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. முட்டை விற்பனை சீராக இருப்பதால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும், மேலும் 5 காசுகள் உயா்த்த வேண்டும் என்றனா். இதனையடுத்து பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்வுடன் ரூ. 4.95-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 127-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 96-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT