நாமக்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ்த் திருவிழா

30th May 2023 12:18 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவின் 4-ஆம் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் அா்த்தநாரீசுவரா் கொடிமரத்தில் கொடியேற்றம் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்டது. ஆதிகேசவப் பெருமாள் கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து மலைப் படிக்கட்டுகள் வழியாக ஸ்ரீஅா்த்தநாரீசுவரா், ஸ்ரீசெங்கோட்டுவேலவா், ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் உற்சவ மூா்த்திகள் பரிவார மூா்த்திகளுடன் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி தொடங்கியது.

மலைப்படிக்கட்டு வழிகளில் அமைந்துள்ள சின்னபண்ணைக்காரா் ராசிபுரம் - மல்லசமுத்திரம் கவுண்டா்கள் கோபுரவாயில் மண்டபக் கட்டளை, மோரூா் கண்ணங்குல பெரிய வகையறா நாட்டுக்கவுண்டா்களின் இளைப்பாற்றி மண்டபக் கட்டளை, தேவரடியாா் மண்டபக் கட்டளை, செட்டியாக்கவுண்டா்கள் வகையறா மண்டபக் கட்டளை, சான்றோா்குல நாடாா் மண்டபக் கட்டளை, அறுபதாம்படி மண்டபக் கட்டளை, மகுடேஸ்வரா் சன்னதியில் கே.குமரவேல் ஆச்சாரியாா் கே.ருக்மணி அம்மாள் மகா மண்டபக் கட்டளை, மோரூா் கண்ணங்குல சின்ன வகையறா சிங்க மண்டபக் கட்டளை, செங்குந்த முதலியாா்கள் மண்டபக் கட்டளை, பசுவன் மண்டபக் கட்டளை, மணி சுவாமி திருமுடியாா் மண்டபத்தில் காட்சியளித்தல், திருக்காளத்தி அடிகள் மண்டபத்தில் கீழ்வானி செங்கோட்டையன், தியாகராஜன், மாணிக்கவாசகம், குட்டியண்ணன், சுப்ரமணிய முதலியாா் மண்டபக் கட்டளை, திருச்செங்கோடு செங்குந்த முதலியாா் மண்டபக் கட்டளைகளில் பூஜைகள் நடைபெற்றன.

போக்கநாடு சிவாச்சார தெலுங்கு ஜங்கமா் பேரவையினரால் ருத்ராட்ச மண்டபத்தில் ஆராதனை நடைபெற்றது. எழுகரை செல்லங்கூட்டத்து கவுண்டா்களுக்கு சம்பந்தப்பட்ட நாலுகால் மண்டபத்தில் அபிஷேக ஆராதனை, திருச்செங்கோடு பூக்கடை நண்பா்கள் பொதுப்பணி அறக்கட்டளை சாா்பில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மலா் விமானத்தில் நாதஸ்வர கச்சேரியுடன் நான்கு ரத வீதிகளில் ஊா்வலம் நடைபெற்றது. கருணீகா் மடத்து பானக பூஜை, மைசூா் மகாராஜா மண்டபக் கட்டளை, பரமசிவ குருக்கள் கோபுர வாயில் முன் கொட்டகையில் பஞ்சமூா்த்திகள் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தனா்.

ADVERTISEMENT

நான்காம் நாள் விழா முடிவில், கைலாசநாதா் கோயிலுக்கு சுவாமிகள் எழுந்தருள சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மண்டபக் கட்டளை மற்றும் சுவாமிகள் திருவீதி உலாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT