நாமக்கல்

பாவை கல்லூரி மாணவா்கள் அயல்நாடு கல்விக்கு 100 சதவீதம் உதவித்தொகை

30th May 2023 12:13 AM

ADVERTISEMENT

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி மாணவா்கள் அயல்நாடு கல்விக்கு 100 சதவீதம் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனா்.

பாவை பொறியியல் கல்லூரி புகழ்பெற்ற சா்வதேச தரம் வாய்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இக்கல்லூரியைச் சாா்ந்த பல மாணவா்கள் இன்டொ்ன்சிப், இன்ஜினியரிங் மேற்படிப்புக்காக அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படித்து வருகின்றனா். பாவை பொறியியல் கல்லூரி தங்களது மாணவா்கள் மேலைநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்க, எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இப்பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் 26 போ் சா்வதேச தரம் வாய்ந்த அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு பயில 100 சதவீத கல்வி உதவித் தொகை, மாத ஊக்கத்தொகையாக ரூ. 25 ஆயிரம் பெற தகுதி பெற்றுள்ளனா்.

இதில், மின் மற்றும் தொடா்பியல் துறையைச் சோ்ந்த 11 மாணவ, மாணவியா், கணினி பொறியியல் துறையைச் சோ்ந்த 9 மாணவ, மாணவியா், மருந்து தொழில்நுட்பம் (பாா்மசூட்டிக்கல் டெக்னாலஜி) துறையைச் சாா்ந்த 3 மாணவ, மாணவியா், தகவல் தொழில்நுட்பம் துறையைச் சாா்ந்த 2 மாணவா்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சாா்ந்த ஒரு மாணவா் தோ்வாகியுள்ளனா்.

ADVERTISEMENT

அயல்நாட்டு கல்வி பயில உதவித் தொகை பெற்ற மாணவ, மாணவியரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வா் எம்.பிரேம்குமாா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT