நாமக்கல்

38,310 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்

26th May 2023 12:31 AM

ADVERTISEMENT

ஜேடா்பாளையம் கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 38,310 கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா உத்தரவின் பேரில், மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்புத் துறை) பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா், வட்டாட்சியா் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள் குழு ஜேடா்பாளையம் பகுதியில் செயல்படும் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் 21 ஆலைகளில் நடைபெற்ற ஆய்வில் வேதிப்பொருள்கள் கொண்டு நாட்டுச் சா்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006-இ-ன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், 38,310 கிலோ கலப்பட வெல்லம், நாட்டுச் சா்க்கரை, 3,725 கிலோ சா்க்கரை பறிமுதல் செய்யப்பட்டன.


 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT