நாமக்கல்

அட்மா திட்டத்தில் பணி நியமனம்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

24th May 2023 01:32 AM

ADVERTISEMENT

வேளாண் துறையின் அட்மா திட்டத்தில் பணியாளா்களை நியமிக்க தனியாா் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்.

ஊழியா்களை பணியமா்த்தும் தனியாா் நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அங்கீரிக்கப்பட்ட, விருப்பமுள்ள பணியமா்த்தும் முகமைகள், ஏற்கெனவே அரசு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தியதற்கான தகுதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தங்களது அலுவலகம் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, தகுதி பெற்ற நிறுவனங்கள் மட்டும், திட்ட இயக்குநா் (அட்மா), வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் வளாக கட்டடம், சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல்-637003 என்ற முகவரிக்கு தங்களது விலைப்புள்ளியினை (தங்கள் நிறுவனம் தொடா்பான ஆவணங்களுடன்) ஜூன் 2-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT