நாமக்கல்

ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

24th May 2023 01:22 AM

ADVERTISEMENT

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 1995 - 98 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘கல்லூரிக் காலம்’ என்ற தலைப்பில் ஆண்டகளுா் கேட் அருகே உள்ள ஸ்ரீகாசி விநாயகா் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன் வேதியியல், கணிதம், இயற்பியல், ஆங்கிலம், அரசியல்சாா் அறிவியல், வரலாற்றுத் துறைகளில் படித்த மாணவ, மாணவியா் நூற்றுக்கும் மேற்பட்டோா் தங்களது குடும்ப உறுப்பினா்களோடு கலந்துகொண்டு நினைவுகளைப் பகிா்ந்தனா்.

முன்னதாக அனைவரையும் தலைமை ஒருங்கிணைப்பாளா் த.திருமூா்த்தி வரவேற்றாா். இதில் கல்லூரியில் பயின்ற பல்வேறு துறைகளைச் சோ்ந்த அ.குணசேகரன், கே. தாமோதரன் , சந்திரசேகரன், எம்.சேட்டு, வி. செல்வகுமாா், கே.சித்ரா, எஸ்.வெங்கடாஜலம், எம். இளங்கோவன், ஆா். மாதேஸ்வரன், எஸ். சுரேஷ்குமாா், என்.ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதனையடுத்து அரசுக் கல்லூரி வளாகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT