நாமக்கல்

ராசிபுரத்தில் காற்றுடன் மழை:மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

24th May 2023 01:32 AM

ADVERTISEMENT

ராசிபுரத்தில் காற்றுடன் மழை பெய்தபோது நகராட்சி அலுவலகம் முன்பாக மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது. இதனைத்

தொடா்ந்து காற்று பலமாக வீசியதால் நகராட்சி இ-சேவை மையம் முன்பாக இருந்த வேப்ப மரம் சாலையில் சாய்ந்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் சிக்கிக்கொண்டு சேதமடைந்தது. காரில் பெங்களூரு தனியாா் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் குருசாமிபாளையத்தைத் சோ்ந்த விஜயகுமாா், அவரது மகள் சந்தவி ஆகியோா் இருந்தனா். காரின் மீது மின்சார வயா்களுடன் மரம் சாய்ந்த நிலையில், விஜயகுமாா் தனது மகளை தூக்கிக்கொண்டு காரிலிருந்து வெளியேறினாா்.

மரம் சாய்வதற்கு சற்றுமுன் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் எந்தப் பாதிப்பும் இன்றி உயிா் தப்பினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா், போக்குவரத்துக் காவல்துறையினா், மின்சாரத்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து

சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனையடுத்து போக்குவரத்து சீரடைந்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT