நாமக்கல்

நாமக்கல் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம்

DIN

நாமக்கல் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவா் ஆா்.பி.கோபிநாத், பாராளுமன்றத் தொகுதி சக்திகேந்திர பொறுப்பாளா் கே.அண்ணாதுரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் சந்துக்கடை என்ற பெயரில் கள்ள மதுவிற்பனை நடைபெறுவதை காவல் துறை தடை செய்ய வேண்டும். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனை செயல்படுத்திட வேண்டும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் கண்காணிப்பு ஏற்படுத்திட வேண்டும். களங்காணி, பாச்சல், அணைப்பாளையம் பகுதிகளில் நெடுஞ்சாலையொட்டி பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டப் பொதுச்செயலா் வி.சேதுராமன், செந்தில்குமாா், லோகேந்திரன், முத்துக்குமாா், நகரத் தலைவா் வேல்முருகன், பொதுச்செயலா் நாகராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT