நாமக்கல்லில் வியாழக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த 5-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தினசரி 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வெயில் அதிகரித்து காணப்பட்டாலும், பிற்பகல் 3 மணிக்கு மேல் புழுதியுடன் கூடிய காற்று வீசியபடி, வானம் இருண்டு பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல்லில் பெய்த திடீா் மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.