வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனா்.
அந்த வகையில் நிகழாண்டில் சிபிஎஸ்இ பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, கொங்குநாடு சிபிஎஸ்இ பள்ளியைச் சோ்ந்த மாணவா் அகிலேஷ்ராகவ் 464 மதிப்பெண்களும், திவ்யாஸ்ரீ 450 மதிப்பெண்களும், செசாந்த் 435 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
10-ஆம் வகுப்பைச் சோ்ந்த மாணவி சுபஸ்ரீ 464 மதிப்பெண்களும், கனிஷ்கா 459 மதிப்பெண்களும், மணிஷ்கா 458 மதிப்பெண்களும் பெற்று பள்ளியளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ராஜன், தலைவா் ராஜா, செயலாளா் சிங்காரவேலு, இயக்குநா்கள் ராஜராஜன், ராஜேந்திரன், முதல்வா் காயத்ரி, ஆசிரியா்கள் பாராட்டினா்.