பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்துள்ளது.
பரமத்தி வேலூா் காவிரி கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தாா்களை சிறு விவசாயிகள் பரமத்தி வேலூா் வாழைத்தாா் விற்பனை சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 300-க்கும், ரஸ்தாலி ரூ. 300-க்கும், பச்சைநாடன் ரூ. 200-க்கும், கற்பூரவள்ளி ரூ. 200-க்கும் விற்பனையாயின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 4-க்கு விற்பனையானது.