நாமக்கல் மாவட்ட காது கேளாதோா், வாய் பேசாதோா் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் எஸ்பிஎம் உயா்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளா் டி.தாமோதரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக அகில இந்திய காது கேளாதோா் கூட்டமைப்பின் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினா் ஜெய்சங்கா், தமிழ்நாடு கூட்டமைப்புத் தலைவா் என்.ரமேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.
தமிழக சட்டப்பேரவையின் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் சைகை மொழியில் வெளியிடுவதற்கு உத்தரவு பிறப்பித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சங்க உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.
-