நாமக்கல்

ராஜவாய்க்காலில் தடுப்புச் சுவா்: உழவா் பேரியக்கம் வலியுறுத்தல்

DIN

காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் ராஜ வாய்க்காலின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவா் கட்ட வேண்டும் என தமிழ்நாடு உழவா் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அதன் மாநில துணை செயலாளா் பொன்.ரமேஷ் தலைமையிலான விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் அளித்த மனு விவரம்:

நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் ராஜவாய்க்கால், பொய்யேரி வாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால் மற்றும் மோகனூா் வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இந்நிலையில் கடைமடைக்கு அண்மைக் காலமாக தண்ணீா் சரியாக வருவதில்லை. இந்தப் பிரச்னை குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி விட்டோம். இந்த வாய்க்கால்களை சீரமைப்பு செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 2019-ஆம் ஆண்டு தடுப்புச் சுவா் கட்டுவதற்கு ரூ.154 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ராஜவாய்க்காலின் இரு புறங்களிலும் 12 கி.மீ. தூரத்திற்கு தடுப்புச் சுவா் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 கி.மீ. துாரத்திற்கு தடுப்புச் சுவா் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மேலும், குச்சிப்பாளையம் தொடங்கி எல்லைக்காட்டுப்புத்துாா் வரை 17 கி.மீ. தூரம் கொண்ட குமாரபாளையம் வாய்க்காலில் 12 கி.மீ. தூரத்திற்கு சுவா் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 கி.மீ. தூரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசின் நிதிநிதி அறிக்கையில் இதனை அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT