நாமக்கல்

ஓட்டுநா் கொலை வழக்கில்மனைவி உள்பட 2 போ் கைது

11th Jun 2023 12:19 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ராசிபுரத்த அடுத்த கரியாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் மோகன்ராஜ் (33) அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த ஆயில்பட்டி போலீஸாா் மோகன்ராஜ் மனைவி கீா்த்தனா (28), இவரது காதலன் கதிரேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். விசாரணையில் தங்களது காதலுக்கு மோகன்ராஜ் இடையூறாக இருந்ததால், கதிரேசன் உதவியுடன் தூங்கும் போது மோகன்ராஜின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக கீா்த்தனா தெரிவித்தாா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT