நாமக்கல்

சாலை விரிவாக்கப் பணி: மரங்களை வெட்ட 14 ஆம் தேதி பொது ஏலம்

10th Jun 2023 07:11 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலையான திருச்செங்கோடு - அரியானூா் சாலையை மல்லசமுத்திரம் காவல்நிலையம் முதல் காளிப்பட்டி வரை, 2022-2023ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் அகலப்ப டுத்தி மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

இதையொட்டி இடையூறாக உள்ள 34 மரங்களை அகற்றுவதற்கு, மாவட்ட ஆட்சியா், மாவட்ட பசுமைக் குழு தலைவா் ஒப்புதல்படி வரும் 14 ஆம் தேதி, திருச்செங்கோடு உட்கோட்ட அலுவலக வளாகத்தில் பொது ஏலம் நடை பெறுகிறது. ஏலம் கோர விரும்புபவா்கள் முன்வைப்புத் தொகையான ரூ. 30 ஆயிரத்தை உதவிக்கோட்ட பொறியா ளா் அலுவலகத்தில் 14ஆம் தேதி முற்பகல் 10.30 மணி வரை செலுத்தி முன்பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டு ஏலம் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT