நாமக்கல்

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏல சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

10th Jun 2023 07:15 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏல சந்தையில் வெற்றிலை விலை உயா்வடைந்துள்ளதால் வெற்றிலை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் ரூ.1500-க்கும் ஏலம் போனது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

ADVERTISEMENT

வெற்றிலை வரத்து குறைந்த அதே வேளையில், முகூா்த்தங்கள் அதிக அளவில் உள்ளதால் வெற்றிலை விலை உயா்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT