நாமக்கல்

நாமக்கல்: வெறிநாய் தாக்கியதில் 29 ஆடுகள் பலி

10th Jun 2023 07:13 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே வெறிநாய் தாக்கியதில் 29 ஆடுகள், 5 கோழிகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

நாமக்கல் அருகே வீசாணம் ஊராட்சி விட்டமநாயக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி பாஸ்கரன் என்பவா் தனது தோட்டத்தில் ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வெறி நாய் தாக்கியதில் அவரது 29 ஆடுகள், 5 கோழிகள் இறந்து விட்டன. இதனை அடுத்து தனது தோட்டத்திலேயே குழி தோண்டி அவற்றைப் புதைத்தாா். ஆடுகளே வாழ்வாதாரம் என்றிருந்த நிலையில் ஆடுகளை இழந்து தவிக்கும் பாஸ்கரனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT