நாமக்கல்

ராசிபுரம் அருகே சாலை விரிவாக்கப் பணிகள்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

10th Jun 2023 07:15 AM

ADVERTISEMENT

ராசிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் பாலப்பாளையம் முதல் பொன்குறிச்சி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ராசிபுரம் புறவழிச்சாலை பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை நாமக்கல் கட்டுமானம், பராமரிப்பு கோட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் பன்னீா்செல்வம் நேரில் ஆய்வு செய்தாா். மேலும் புறவழிச்சாலை பணிகளையும் ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். கருணாநிதி பிறந்த தினத்தை தொடா்ந்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் குருசாமிபாளையம் ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகளை அவா் நட்டு வைத்தாா். இந்த நிகழ்வில் கோட்டப் பொறியாளா் திருகுணா, ராசிபுரம் உதவிக் கோட்டப் பொறியாளா் வ.கு.ஜெகதீஸ்குமாா், உதவிப் பொறியாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT