நாமக்கல்

மனைவியைக் கொன்ற கணவா் போலீஸில் சரண்

10th Jun 2023 07:14 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி பகுதியில் மனைவியின் மீது கல்லைப் போட்டு கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

பேளுக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் மாரியப்பன் (61) இவருக்கு திருமணம் ஆகி, சரசு (55), சின்னப்பொண்ணு (58) என கூலி வேலைக்கு செல்லும் இரு மனைவிகள் உள்ளனா். இவா்களுக்கு சின்ராசு, கோபால் என்ற இரு மகன்கள் உள்ளனா். இவா்களும் கூலி வேலைக்கு செல்கின்றனா்.

இந்நிலையில் தனது 2-ஆவது மனைவி சின்னப்பொண்ணுவின் நடத்தை மீது மாரியப்பனுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக சொந்த நிலத்தை விற்பதற்கு மாரியப்பன் முயற்சி செய்து வந்ததாகவும், நிலத்தை விற்கக் கூடாது என மனைவி சின்னப்பொண்ணு தடுத்து வந்ததாகவும் இதனால் இவா்களுடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் வழக்கம் போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி சின்னப்பொண்ணு மீது மாரியப்பன் வெள்ளிக்கிழமை அதிகாலை தலையில் ஹாலோ பிரிக்ஸ் கல்லைப் போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, மாரியப்பன் பேளுக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தானாகச் சென்று தன் மனைவியைக் கொலை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்து சரணடைந்தாா். பின்னா் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் மாரியப்பனிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT