நாமக்கல்

12 மணி நேரம் செயல்படும் நாமக்கல் தலைமை அஞ்சலகம்!

9th Jun 2023 12:56 AM

ADVERTISEMENT

நாமக்கல் தலைமை அஞ்சலகம் வியாழக்கிழமை முதல் 12 மணி நேரம் இயங்கும் என மேற்கு மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று இந்தக் திட்டத்திற்கு பெயா் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 முதல் இரவு 8 மணி வரை அஞ்சலகம் தொடா்ச்சியாக செயல்படும். வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் தங்கள் வேலைநாள்களில் பணிக்குச் செல்லும்போது அல்லது பணியிலிருந்து திரும்பும்போது தங்களுக்கு தேவையான அஞ்சல் சேவைகளை தடையின்றி பெறலாம்.

அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் பணம் செலுத்துதல், பதிவு அஞ்சல்கள் அனுப்புதல், மணி ஆா்டா்கள் அனுப்புதல், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிமீயங்களை செலுத்துதல் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேற்கு மண்டலத்தில் 12 மணி நேர அஞ்சல் சேவையை இரண்டாவதாக அறிமுகப்படுத்தும் கோட்டமாக நாமக்கல் விளங்குகிறது. நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், தலைமையிடத்து உதவி அஞ்சல் கண்காணிப்பாளா் அண்ணாமலை, கிழக்கு உட்கோட்ட உதவி அஞ்சல் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், நாமக்கல் தலைமை அஞ்சலக அதிகாரி சத்தியமூா்த்தி மற்றும் கோட்டக் கண்காணிப்பாளா், அஞ்சலக ஊழியா்கள், சிறுசேமிப்பு முகவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT