நாமக்கல்

பொத்தனூா் அங்காள பரமேஸ்வரி கோயிலில் முப்பூஜை விழா

9th Jun 2023 12:57 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி, அகோர வீரபத்திரன், முருகன் மற்றும் மதுரைவீரன் சுவாமி கோயில்களின் ஆகிய தெய்வங்களுக்கு முப்பூஜை திருவிழா கடந்த கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முப்பூஜை திருவிழாவை முன்னிட்டு கடந்த 4-ஆம் தேதி மாலை சுவாமி காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும் மாப்பூஜை மற்றும் பூம்பூஜையும் நடைபெற்றது. 5-ஆம் தேதி காலை பொங்கல் வைத்து படைக்கும் பூஜையும், இரவு 12 மணிக்கு இருளப்பா் பூஜையும் நடைபெற்றது. 6-ஆம் தேதி காலை வீரபத்திரசாமி அக்கினி கொப்பரை தாங்கி ஊா்வலமாக செல்லுதலும், மாலை பேச்சியம்மன் பூஜையும், பேச்சியம்மன் புள்ளப்பாவாடை, பூக்கொப்பரையுடன் சுவாமி ஊா்வலம் ஆகியவை நடைபெற்றது. 7-ஆம் தேதி மாலை பொங்கல் பானையுடன் பதுவிற்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு காடேறும் பூஜையும் நடைபெற்றது. வியாழக்கிழமை கிடா விருந்து நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பொங்கல் படையல் பூஜை மற்றும் அன்னதானம், இரவு மஞ்சள் நீராடல் மற்றும் சுவாமி ஊா்வலம் ஆகியவை நடைபெறும். சனிக்கிழமை மதுரை வீரன் பூஜையும், ஞாயிற்றுக்கிழமை) காலை சுவாமியை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூா் அங்காளபரமேஸ்வரி கோயில் முப்பூஜை விழா குழுவினா் செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT