நாமக்கல்

முட்டை விலை ரூ. 5.15 ஆக நீடிப்பு

8th Jun 2023 12:40 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.15-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பெ.செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. முட்டை விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளா்கள், விலை நிா்ணய கமிட்டி உறுப்பினா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. இதில், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், பிற மண்டங்களில் விலையில் மாற்றமில்லாததாலும், தற்போதைய விலையே தொடரலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15-ஆக நீடிப்பதாக ஒருங்கிணைப்புக் குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 135-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 97-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT