நாமக்கல்

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

8th Jun 2023 12:40 AM

ADVERTISEMENT

ராசிபுரத்தை அடுத்த மெட்டாலா பகுதியில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

இந்த ஏடிஎம் மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் கண்காணிப்பு கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க வெல்டிங் மிஷினை பயன்படுத்தினா். அப்போது, அவ்வழியாக சிலா் வந்ததையடுத்து, அந்த மையத்திலிருந்து மா்ம கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆயில்பட்டி போலீஸாா் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT