நாமக்கல்

தியாகிகளின் வாரிசுகள் ஆலோசனைக் கூட்டம்

7th Jun 2023 12:13 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச் சங்க பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்றது.

அச் சங்கத்தின் தலைவா் க.சிதம்பரம் சிறப்புரையாற்றினாா். துணை செயலாளா் கே.கோவிந்தராஜ், நிா்வாகிகள் நவீத்காதா், அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒடிஸா ரயில் விபத்தில் பலியானோருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுளுக்கான குறைதீா் கூட்டத்தை ஜூலை மாதம் நடத்த வேண்டும். நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரைச் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT