நாமக்கல்

திருச்செங்கோடு அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் தற்கொலை

7th Jun 2023 12:12 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்

மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் வறுமையில் சிக்கித் தவித்து வந்த திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை, நடுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி நடேசன் (65) வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவரது பூட்டியே இருந்தது.

சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் ஜன்னல் வழியாக பாா்த்த போது நடேசன், அவரது மனைவி சிந்தாமணி (52), மகன் நந்தகுமாா் (35) ஆகிய மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனா். தகவலறிந்த எலச்சிபாளையம் போலீஸாா் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT