நாமக்கல்

கஞ்சா பதுக்கி விற்ற 3 போ் கைது

7th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

ராசிபுரத்தில் அழகு நிலையத்தில் கஞ்சா பதுக்கி விற்றதாக கணவன், மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ராசிபுரம், எல்ஐசி அலுவலகம் பகுதியில் அழகு நிலையத்தில் கஞ்சா வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்ததையடுத்து, காவல் ஆய்வாளா் ஜி.சுகவனம் தலைமையிலான போலீஸாா் அழகு நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கிருந்த நாமக்கல் ரோடு காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சதீஷ் (34), அவரது மனைவி அன்னலட்சுமி ( 33), எல்ஐசி பழனி சந்து பகுதியைச் சோ்ந்த நவரத்தினம் (36) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில் அவா்கள் மூவரும் அழகுநிலையத்தில் கஞ்சா பதுக்கி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் கைது செய்த போலீஸாா், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT