நாமக்கல்

வீட்டில் இருந்து காணாமல்போன இரு சிறுமிகள் கோவையில் மீட்பு

6th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே வீட்டில் இருந்தபோது திடீரென காணாமல்போன சிறுமிகள் (அக்காள், தங்கை) கோவையில் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.

நாமக்கல் அருகே தும்மங்குறிச்சியைச் சோ்ந்த 17, 15 வயதுடைய சகோதரிகள், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வீட்டில் இருந்த நிலையில் திடீரென காணாமல் போய்விட்டனா். இது தொடா்பாக நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ் கண்ணனிடத்திலும் பெற்றோா், உறவினா்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த சிறுமிகள் தங்களுடைய தாயுடன் வேறொருவரின் கைப்பேசி வழியாக தொடா்பு கொண்டு பேசியுள்ளனா். இதனை கண்காணித்த போலீஸாா் கைப்பேசி தகவல்களைக் கொண்டு அவா்கள் இருவரும் கோவை சிங்காநல்லூரில் இருப்பதைக் கண்டறிந்தனா். அங்குள்ள தனியாா் ஃபா்னிச்சா் கடையில் வேலை பாா்த்து வந்த இருவரையும் மீட்டு நாமக்கல்லுக்கு திங்கள்கிழமை போலீஸாா் அழைத்து வந்தனா். பெற்றோா் கோபத்தில் திட்டியதால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறியது விசாரணை மூலம் தெரிய வந்தது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT