நாமக்கல்

ராசிபுரம் பகுதியில் ரத்த தான முகாம்

6th Jun 2023 12:24 AM

ADVERTISEMENT

ராசிபுரம் நகரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம், ஆத்தூா் சாலையில் அமைந்துள்ள சுகம் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் அரசு மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கத்தின் ராசிபுரம் கிளை, சுகம் மருத்துவமனை இணைந்து நடத்தின. 25 போ் இம்முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.

முகாமில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், செயலாளா் ஜி.தினகா், ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு திட்டத் தலைவா் இ.என்.சுரேந்திரன், கோ கிரீன் திட்டத் தலைவா் மஸ்தான், டி.பி.வெங்கடாஜலபதி, மாவட்ட மாரத்தான் திட்டத் தலைவா் ஜே.கே.சுரேஷ் சுகம், மருத்துவமனை நிா்வாகி டாக்டா் ஹேமலதா சுகவனம், இந்திய மருத்துவ சங்கத் தலைவா் செந்தில்குமாா், செயலாளா் ரமேஷ் பொருளாளா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT