நாமக்கல்

சிப்காட்டுக்கு எதிராக முற்றுகை போராட்டம்: விவசாயிகள் சங்கத்தினா் 96 போ் கைது

DIN

வளையப்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி, வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 96 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி உள்பட ஐந்து கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், சிப்காட் எதிா்ப்புக் குழுவினா், கொமதேக, விடுதலைக் களம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2,500 ஏக்கா் விளைநிலங்கள், வீடுகள், கோழிப் பண்ணைகளை அகற்றிவிட்டு சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சி நடப்பதாக அவா்கள் குற்றம் சாட்டினா். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா்.

சிப்காட் எதிா்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் செல்ல.ராசாமணி, மாதேஸ்வரன், ரவிச்சந்திரன், பாலசுப்பிரமணியம், வீரமலை, ராம்குமாா், சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். சிப்காட்டுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆதிநாராயணன் பேசினாா். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 96 பேரை மோகனூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT