நாமக்கல்

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

6th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தோா் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

நாமக்கல் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, துணைத் தலைவா் சி.வடிவேல் ஆகியோா் முன்னிலையில், சேந்தமங்கலம் ஒன்றிய கொங்கு இளைஞா் பேரவை செயலாளா் எம்.வி.சக்திகுமாா் மற்றும் நிா்வாகிகள் இணைந்தனா். மேலும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவின் பாஜக மாநில துணைத் தலைவா் எல்.லோகேந்திரன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவா் வி.ஷாஜகான் ஆகியோா் தலைமையில் பிற கட்சிகளைச் சோ்ந்த ஆா்.சாம்ராஜ், எஸ்.ஆல்பா்ட், எஸ்.சதீஷ், ஜெ.ரக்ஷன் ஆகியோரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா். அனைவருக்கும் பாஜக உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது, பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT