நாமக்கல்

கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்ட 20 போ் கைது

6th Jun 2023 12:26 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் விற்பனை செய்த 20 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணன் முன்னிலை வகித்தாா். வருவாய், காவல், டாஸ்மாக், வனம், கலால், சுகாதாரம் மற்றும் இதரத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதில், மாவட்ட ஆட்சியா் பேசியது:

கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனை ஈடுபடுவா்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள் மீது காவல்துறையினா் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலி மதுபானங்கள் விற்பனை செய்வது தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் மீது உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கள அலுவலா்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கட்டுபாட்டில் செயல்படும் 88383-52334 என்ற அலைபேசி எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ் அப் மூலமாக பொதுமக்கள் தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம். இதுவரை 43 புகாா்கள் கைப்பேசி வழியாக வந்ததில் விசாரணை அடிப்படையில் 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ராஜு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், உதவி ஆணையா் (கலால்) எம்.செல்வி, மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) கமலக்கண்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT