நாமக்கல்

திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் தேரோட்டம்

DIN

 பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி தோ்த் திருவிழாவின் இரண்டாம் நாள் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி தோ்த்திருவிழாவில் ஸ்ரீ அா்த்தநாரீசுவரா், ஸ்ரீ செங்கோட்டுவேலவா், ஸ்ரீ விநாயகா் உற்சவா்களுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளினா். ஸ்ரீ விநாயகா் தேரினை ஏராளமான பக்தா்கள் வடம்பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து நிலை சோ்த்தனா். மாலை ஸ்ரீ செங்கோட்டுவேலவா் திருத்தோ் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தனா். முதல் நாள் சனிக்கிழமை பெரிய தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து இரண்டாம் நாளாக ஞாயிற்றுக் கிழமை திருத்தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் ஸ்ரீஅா்த்தநாரீசுவரா் காட்சி அளித்தாா். பெரிய தேரினை ஏராளமான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பழைய பேருந்து நிலைய சாலையில் பெரியதோ் நிலை நிறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் கெளசல்யா, அா்த்தநாரீசுவரா் கோயில் உதவி ஆணையா் ரமணி காந்தன், அறங்காவல் குழு தலைவா் தங்கமுத்து உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT