நாமக்கல்

நாமக்கல் ரயில் நிலையத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

5th Jun 2023 03:24 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் ரயில் நிலையத்தில், ஒடிஸா ரயில் விபத்தில் இறந்தோருக்கு மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில், 288 பயணிகள் உயிரிழந்தனா். நாடு முழுவதும் விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில், அதன் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், நாமக்கல் ரயில் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி சங்க உறுப்பினா்கள் மெளன அஞ்சலி செலுத்தினா். வரும் காலங்களில் ரயில் விபத்துக்கள் நடக்காதவாறு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT