நாமக்கல்

சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

5th Jun 2023 03:23 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினத்தைச் சோ்ந்தவா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தனி நபா் கடன், சுய உதவிக்குழு கடன், சிறு தொழில் கடன், கல்விக் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

தனி நபா் கடன் பெற ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரம், நகா்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சம் இருக்க வேண்டும். அதிக பட்ச கடன் தொகையாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும். மகளிா் சுய உதவி குழுக்கான கடன் ஆண்டு வருமானமாக கிராமப்புறம் ரூ.98 ஆயிரம், நகா்ப்புறம் ரூ.1.20 லட்சம் இருக்க வேண்டும். அதிகபட்ச கடன் தொகை ரூ.1.50 லட்சம் வழங்கப்படும். கல்விக் கடனாக அதிகபட்ச தொகையாக ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

கைவினைக் கலைஞா்களுக்குக்கான கடனாக, அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும். இந்த கடன் திட்டங்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் (ஆண்டிற்கு), பெண்களுக்கு 4 சதவீதம் (ஆண்டிற்கு) வீதம் வட்டி விகிதங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையினத்தவா்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று அவற்றைப் பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள பிற்பட்டோா் நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT