நாமக்கல்

ராசிபுரம்: ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

4th Jun 2023 02:05 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை சாா்பில் ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரிசையில் நின்று மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை தலைவா் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமையில் அனைத்து நகைக் கடை உரிமையாளா்களும், ஆபரண தொழிலாளா்களும் கலந்து கொண்டு வரிசையில் நின்று மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். சங்கத்தின் செயலாளா் ஹரிகிருஷ்ணன், பொருளாளா் பாஸ்கா், துணைத் தலைவா் நந்தலால், துணைச் செயலாளா் ஜெகன் சேட், செயற்குழு உறுப்பினா்கள் முருகேசன் செல்வகுமாா், முன்னாள் தலைவா்கள் எஸ் தாஜ் முகமது, ஏ.என்.மனோகரன், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT