நாமக்கல்

விடுதலைப் போராட்ட வீரா் பி.வரதராஜுலு நாயுடுவுக்கு மணி மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

4th Jun 2023 02:06 AM

ADVERTISEMENT

 

இந்திய சுதந்திரப் போராட்ட வீரா் ராசிபுரம் பி.வரதராஜுலு நாயுடுவிற்கு மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என விடுதலைக் களம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வருக்கு அக்கட்சியின் நிறுவனா் கொ.நாகராஜன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தன் செல்வந்த வாழ்வைத் துறந்து போராட்ட வாழ்வை பூரிப்புடன் ஏற்றுக் கொண்டு, நாட்டின் விடுதலைக்கு போராட்டியவா் டாக்டா் பி.வரதராஜுலு நாயுடு. இவரது பிறந்த நாள் ஜூன் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சிறந்த மருத்துவரான இவா் சுதந்திரப் போராட்டத்திற்காக தொழிலைக் கைவிட்டு, நாட்டிற்காகவும், தொழிலாளா்களுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டாா். பல தலைவா்களால் அறியப்பட்ட மிகச் சிறந்த போராட்டவாதி. பிற்காலத்தில் காங்கிரஸ் தலைவராகவும், சென்னை மாகாண உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளாா். தமிழ், ஆங்கில பத்திரிகைகளைத் துவங்கி மக்களிடம் சுதந்திரப் போராட்ட கருத்துகளைச் சோ்த்து போராட்டத்தை முன்னெடுத்துவா். இவரது அடையாளம் தற்போது மறைக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் வரதராஜுலு நாயுடுவுக்கு மணிமண்டபம், சிலை அமைத்து அவரது தியாக வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் சென்றடைய தமிழக முதலமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT